பெண்கள் அணியும் தாலிக்கு பின்னால் இருக்கும் பின்னணி: இதை செய்தால் கணவனுக்கு ஆபத்து!
ஒரு பெண்ணுக்கு தாலி என்பது மற்றுமொரு அங்கிகாரம் தான். இதனை அணியும் பெண்கள் திருமணமானவர்கள் என்று அடையாளம் காண்பதற்காகத் தான் இந்த தாலி என்ற ஆபரணம் அணியப்படுகிறது.
இந்த தாலி கணவன் மனைவிக்கு தனது உற்றார் உறவினர்கள் முன்னிலையிலும் அக்னியை சாட்சியாகவும் வைத்து மூன்று முடிச்சு போடுவார்கள்.
இதிலும் எமது முன்னோர்கள் சொல்லி வைத்த சில உண்மையும் உள்ளது அதாவது தாலி கட்டும் போது முதல் முடிச்சு பெண்ணின் உரிமைக்காகவும், இரண்டாவது முடிச்சு உறவுகளுக்காகவும், மூன்றாவது முடிச்சு ஊருக்காக என அதிலும் ஒரு கருத்தை வைத்திருக்கிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு மணிமகுடம் அணிவதற்கு சமமானது இந்த தாலி. இந்த தாலிக்குப் பின்னால் பல உண்மைகள் மறைந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
தாலியின் முக்கியத்துவம்
திருமணம் முடித்த பெண் கண்டிப்பாக காலில் மெட்டியும், நெற்றி வகட்டில் குங்குமமும், கையில் வளையல்களும் முக்கியமாக கழுத்தில் தாலியும் அணிந்திருக்க வேண்டும். எமது மரபுப்படி தாலி என்பது திருமணம் முடிந்த ஒரு பெண்ணுக்கு முக்கியமானது.
அந்த தாலியை வைத்து தான் ஒரு பெண்ணின் பொறுப்புக்களும் கடமைகளும் அவளுக்கு உணர்த்தப்படுகிறது. கணவன் மீதுள்ள அன்பின் வெளிப்பாடும், திருமண வாழ்க்கையில் அவள் எப்படி குடும்பங்களை பாதுகாக்கிறாள் என்பது எல்லாம் இந்த தாலியின் மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது.
இந்த தாலியில் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் உள்ள பிணைப்பின் அடையாளமாகத்தான் தாலியில் தங்கம் பார்வதி தேவியாகவும் கருப்பு மணிகள் சிவனையும் குறிக்கப்படுகிறது.
அதிலும் பாரம்பரிய மங்களசூத்திரமாக 9 மணிகளைக் கொண்ட தாலியில் கணவன் மனைவியை தீய சக்தியில் இருந்து பாதுகாப்பதற்கும் நீர், காற்று,பூமி, நெருப்பு ஆகியவற்றின் ஆற்றல்களைக் கொண்டிருக்கிறது. மேலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் உறவை இன்னும் வலுவாக்குகிறது இந்த மணிகள்
பலன்கள்
- பெண்கள் அணியும் தாலியானது தெய்வீக சக்திகள் கொண்டதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
- கணவன் மனைவியை தீய சக்தியில் இருந்து பாதுகாக்கும்.
- தாலியை இதயத்திற்கு அருகில் அணிந்தால் அண்ட அலைகளை ஈர்த்து இதய செயற்பாட்டை மேம்படுத்தும்.
- தாலி அணியும் பெண்ணுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்பட்டு இருக்கும்.
- தாலியில் இருக்கும் கருப்பு மணிகள் எதிர்மறையான ஆற்றலை விலக்கி வலி, அமைதியை குறைக்கும்.
- தாலி அணியும் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
- நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
-
இரத்த ஓட்டத்தை சீராக்கும்.