பெண்கள் கர்ப்ப காலத்தில் குளிர்பானத்தை அருந்தலாமா?
பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று. அதிலும், கர்ப்ப காலத்தில் குளிர்பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதை புறக்கணித்து குளிர்பானத்தை நாளாந்தம் அருந்தி வந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கு ஏ டி ஹெச் டி எனப்படும் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பெண்கள் கர்ப்ப காலக்கட்டத்தில் கார்பனேட்டட் குளிர்பானத்தை அருந்தினால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எட்டு வயதாகும் போது ஏ டி ஹெச் டி எனப்படும் கவனக்குறைவு ஹைபராக்டிவிடி குறைபாடு என்ற பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
இதன் காரணமாக பெண்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய கார்பனேட்டட் குளிர்பானத்தை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
அதையும் மீறி குளிர்ப்பானத்தை பருகும் பெண்களுக்கு குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் உடல் நலகுறைப்பாடு ஏற்படுமாம்.