சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா? அப்படியாயின் எத்தனை சாப்பிடலாம்!
பொதுவாக சக்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பு வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் மற்றும் கார்போஹைட்ரேட், மாவுப்பொருள்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என பல விதிமுறைகள் இருக்கும்.
சக்கரை வியாதியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
சர்க்கரை நோயாளிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் டீ குடிக்கும் போது கூட சக்கரை எடுத்து கொள்ளமாட்டார்கள். சக்கரை நோயாளர்கள் வெள்ளையாக இருக்கும் சீனி, வெல்லம் என எந்த வகையிலும் சக்கரை எடுத்துக் கொள்ள கூடாது.
இது போன்ற பழக்கங்ளை தவிர்க்காவிட்டால் காலப்போக்கில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால் சிலர் மருத்துவ ஆலோசனைக்கு செல்லும் போது மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட அளவில் சாப்பிடுமாறு அறிவுரை கூறுவார்கள்.
ஏனெனின் பழங்களிலிருக்கும் இனிப்பு சுவை நார்ச்சத்தில் காணாமல் போகிறது. இதனால் மேற்குறிப்பிட்ட பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் சர்க்கரை வியாதியுள்ளவர் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் இருக்கும், இந்த சந்தேகங்களை தொடர்ந்து விஞ்ஞான விளக்கத்துடன் தெரிந்துக் கொள்வோம்.
சக்கரை நோயாளர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?
சக்கரை நோயாளர்கள் பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் உட்கொள்ளாமல் இருந்தால் அது காலப்போக்கில் நம்முடைய உடம்பில் வேறு வேறு பிரச்சினை ஏற்படுத்தும். இதனால் இரும்புச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இரும்புச்சத்துக்கள் கொண்ட உணவுகளில் பேரீச்சம்பழமும் ஒன்று. இதனை காலையில் பாலில் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறது.
மேலும் பழங்களில் அதிகம் சுவையும் சத்துக்களும் உள்ளடங்கியுள்ள பழங்களில் முதல் இடத்தை பேரிச்சம்பழம் தான் பிடிக்கிறது. இதில் கொட்டை இருப்பதால் தான் இந்த பழம், பழவகைகளுக்குள் பெரியதாக சேர்க்கப்படுவதில்லை.
இதனை தொடர்ந்து உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள், இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு பாலில் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதால் சோம்பல் மயக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் சக்கரை நோயாளர்கள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற அடிப்படையில் காலையில் தினமும் எடுத்துக் கொள்வதால் எந்த விதமான பிரச்சினைகளும் வராது.
இது குறித்து எதுவும் சந்தேகம் இருந்தால் பேரிச்சம்பழம் சாப்பிட்ட பின்னர் தங்களின் உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டினை சோதித்துக் கொள்ளலாம்.