ஹீமோகுளோபின் அளவை நொடிப்பொழுதில் அதிகரிக்க செய்யும் அற்புத பானம்! 10 நிமிடங்களில் செய்யலாமாம்!!
பொதுவாக உடலிலுக்கு தினமும் காய்ச்சல் மற்றும் தொற்றுக்கள் பிரச்சினை அதிகமாக இருந்தால் எமது உடலில் இருக்கும் ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
இது போன்ற பிரச்சினைகளை சரிச்செய்யும் அளவிற்கு கடைகளில் மருந்துவில்லைகள் விற்கப்படுகிறது.
ஆனால் இவை காலப்போக்கில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உடம்பில் ஹீமோகுளோபினின் அளவு குறையும் அடிக்கடி காய்ச்சல், தலைவலி, மயக்கம் , தேவையற்ற தொற்றுக்கள், அலற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
அந்த வகையில் ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கும் பானம் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1 கப்
கேரட் - 1 கப்
மாதுளம் பழம் - 1
தேங்காய் தூண்டு - 1/2கப்
பேரீச்சம்பழம் - 4
தண்ணீர் - 1 டம்பளர்
எப்படி செய்யலாம் தெரியுமா?
முதலில் ஒரு பீட்ரூட்டை செய்து நன்றாக தோலை அகற்றி சுத்தம் செய்த பின்னர் சிறுசிறு தூண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு கேரட்டை எடுத்து நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும். அதனையும் சிறு சிறு தூண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
இது ஏன் சேர்கிறோம் என்றால், கேரட்டில் புதிய இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது. மாதுளம் பழத்தையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் காரணம், இதில் அதிகமான இரும்பு சத்து, காபோவைரதரேற்று, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்தக்கள் அதிகம் இருக்கிறது.
இதனால் இந்த பழத்தை எடுத்து சுத்தம் செய்த விட்டு, அதிலுள்ளே இருக்கும் விதைகளை மாத்திரம் எடுத்து தனியாக ஒரு பவுலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
மேற்குறிப்பிட்டிருந்த பீட்ரூட், கேரட், மாதுளம் பழ விதைகள், பேரீச்சம்பழம்,தேங்காய் தூண்டுகள் இவையனைத்தையும் ஒரு மிக்ஸி சாரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த கலவை ஒரு பத்திற்கு இருக்கும் மீண்டும் அந்தக்கலவையில் ஒரு டம்பளர் தண்ணீர் மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பானம் தயார்!
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரிமாறலாம்.