ஒரு வழியாக தமிழ் பெண்ணையே திருமணம் செய்த பும்ரா.. குவுயும் வாழ்த்துக்கள்.. வைரலாகும் திருமண புகைப்படம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கடந்த சில நாட்களாகவே நடிகை அனுபமாவை காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் இணைய ஊடகங்களில் தகவல் தீயாய் பரவி வந்தது. ஆனால் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனுபமாவின் தயார் மறுப்பு தெரிவித்து தன் மகள் ஷுட்டிங்கில் உள்ளார் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பும்ரா கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை கோவாவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதுகுறித்து இருவர் தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனிடையே, பும்ரா மற்றும் சஞ்சனா கணேஷ் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும், சஞ்சனா கணேஷ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்த நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.