மக்கள் சந்தோசமாக இருக்காங்க போல.. வரிச் சுமையே இல்லாத நாடுகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக இந்த உலகில் இருக்கின்ற பெரும்பாலான நாடுகளில் மக்களிடம் இருந்து வரி என்ற பெயரில் பணம் வசுலிக்கிறார்கள்.
இதன்படி, சில நாடுகள் மக்களின் மீது தாங்க முடியாத வரிச்சுமையை சுமத்துகின்றன.
அதேசமயம் விதிவிலக்காத நாடுகளும் இருக்கின்றன. அங்கு வாழ்கின்ற மக்கள் வரி என்ற ஒரு விடயமே தெரியாமல் இருக்கிறார்கள்.
குறிப்பிட்ட சில நாடுகள் நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும்.
இப்படியான நாடுகளில் இருக்கும் அரசாங்கம் குடிமக்களிடமிருந்து வரி வசூலிப்பதில்லை.
அந்த வகையில் வரி சுமையே அல்லாத நாடுகளில் என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வரி சுமையே இல்லாத நாடுகள்
1. மேற்கிந்தியத் தீவுகளில் வரி இல்லாத நாடுகளில் ஒன்றாக பஹாமாஸ் நாடு பார்க்கப்படுகின்றது. இங்கு வாழும் மக்கள் நிரந்தர வதிவிலக்கைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 90 நாட்கள் தங்கியிருக்கலாம்.
2. ஒரு மத்திய அமெரிக்க நாடாக பனாமா நாடு பார்க்கப்படுகின்றது. இந்த நாட்டில் பரந்த வானளாவிய கட்டிடங்கள், கடற்கரைகள் மற்றும் சூதாட்ட விடுதிகள் நிறைந்துள்ளன.
3. கேமன் தீவுகள் கரீபியன் கடலில் வரிவிலக்கு என கூறுவார்கள். கேமன் தீவுகளில் வாழும் மக்களுக்கு வரிவிதிக்கப்படுதில்லை. மாறாக ஊதியம் மற்றும் மூலதன ஆதாயம் எதுவும் இல்லை.
4. வருமானத்திற்கு வரி இல்லாத நாடுகளின் பட்டியலில் டொமினிகாவும் ஒன்று. இந்த நாட்டில் கார்ப்பரேட், எஸ்டேட் அல்லது வரிகள் இப்படியான எதுவும் இல்லை. அத்துடன் பரிசுகள், பரம்பரை சொத்துக்கள், வெளிநாட்டில் சம்பாதித்த வருமானம் போன்றவற்றிற்கும் வரிகள் இல்லை.
5. தனிநபர் வருமான வரி, பெருநிறுவன வரி மற்றும் மூலதன ஆதாய வரி நாடுகளில் பெர்முடாவும் ஒன்று. இங்கு நேரடி வரி இல்லாவிட்டாலும் ஊதிய வரி, முத்திரை வரிகள் மற்றும் சுங்க வரிகள் போன்ற பிற கட்டணங்கள் மற்றும் வரிகள் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |