ஒரு நாளைக்கு நீங்க எத்தனை முறை மலம் கழிக்கிறீங்க? இது இருந்தால் ஆபத்து நிச்சயம்- தெரிஞ்சிக்கோங்க
ஒருவர் நாளொன்றுக்கு எத்தனை முறை மலம் கழிக்கிறார் என்பதனை அடிப்படையாக வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை கணிக்கலாம் எனக் கூறலாம்.
அந்த வகையில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிப்பது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
நாம் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் மலம் கழிக்கும் தடவைகளில் மாற்றத்தை காணலாம் என ஆய்வு பரிந்துரை செய்கிறது.
அந்த வகையில் மலம் கழிப்பதற்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எத்தனை முறை மலம் கழிக்கிறீங்க?
1. பொதுவாக குடல் இயக்கங்களின் அதிர்வெண் நபருக்கு நபர் மாறுப்படும். தினசரி குடல் அசைவுகள் மாறுப்படும் போது ஒருநாளைக்கு ஒருமுறைக்கு மேல் மலம் கழிக்கலாம்.
2. உணவு, உடல் செயல்பாடு மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் குடல் இயக்கங்களின் எண்ணிக்கை மாறுப்படும். இப்படியான நேரங்களில் அடிக்கடி மலம் கழிக்கலாம்.
3. இரண்டு தடவைக்கு மேல் மலம் கழித்தால் குடல் இயக்கங்களில் ஏற்படும் மாற்றம் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் மோசமான உடல் ஆரோக்கியம் இருக்கும் என்று பயப்படத் தேவையில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |