குடும்ப பெண்கள் மறந்தும் இதை யாருக்கும் செய்யாதீங்க! எச்சரிக்கும் புத்தர்
இந்திய தேசம், நாவலந்தீவு என் அழைக்கப்படும் பரதகண்டத்தில் உள்ள, மத்திய தேசத்தில் சாக்கிய ஜனபதத்திலே கபிலவத்து என்னும் அழகான நகரம் ஒன்று இருந்தது.
ஒரு காலத்தில் அந்த நகரத்தை ஜயசேனன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அப்போது அவருக்கு சிம்மஹணு என்னும் மகன் பிறந்தான். சிம்மஹணுவுக்குச் சுத்தோதனர், சுல்லோதனர், தோதோதனர், அமிதோதனர், மிதோதனர் என்னும் ஐந்து மகன்களும், அமிதை, பிரமிதை என்னும் இரண்டு மகளும் பிறந்தனர்.
இவர்களுள் மூத்த மகனான சுத்தோதனர், தமது தந்தை இறந்த பின்னர், அந்த நாட்டிற்கு அரசராக மாறினார். சுத்தோதன அரசரின் மூத்த மனைவியாரான மஹாமாயா தேவிக்கு மகனும், இளைய மனைவிக்கு பிரஜாபதி கௌதமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தார்கள். மாயாதேவிக்குப் பிறந்த மகனுக்குச் சித்தார்த்தன் என்று பெயர் சூட்டினார்கள்.
பிரஜாகௌதமைக்குப் பிறந்த மகனுக்கு நந்தன் என்றும், மகளுக்கு நந்தை என்றும் பெயர் சூட்டினார்கள். இவர்களுள் சித்தார்த்த குமாரன் ஞானம் அடைந்து புத்த பகவானாக விளங்கினார். இப்படி புத்தரின் வாழ்க்கை வரலாற்று எம்மை சுவாரஸ்யப்படுத்தும் அளவுக்கு சென்றுக் கொண்டே இருக்கும்.
புத்த மதம் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைமுறையாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய மக்கள் பெரிதும் ஆராதிக்கும் மதம். இந்தியாவிலும் புத்தரின் கொள்கைகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
புத்தர் போதனைகள் மிகவும் எளிமையானவையாகவும், எந்தவித சிக்கலும் இல்லாத தெளிவான நெறி முறைகளுடன் இருக்கும்.
அந்த வகையில், புத்தருடைய போதனையின்படி, பெண்கள் குடும்ப வாழ்க்கையில் செய்யக் கூடாத தவறுகள் தொடர்பாக தெரிந்து கொள்வோம்.
பெண்களுக்கு விடுத்த எச்சரிக்கை
1. மாயை / வேஷம்
சில சமயங்களில் பெண்களின் அழகு, மென்மை, வார்த்தைகள் போன்றவை மனதை மயக்கக்கூடியவை என்பதால் அதில் சிக்காமல் இருப்பது அவசியம். ஆசை வார்த்தைகளை நம்பி வாழ்க்கை தொலைத்து விட அவஸ்தை அனுபவிக்கும் பெண்கள் நமது சமூகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். இதனை தான் புத்தரும் கூறியுள்ளார்.
2. பற்று
புத்தர் கூறும் மிக முக்கியமான விஷயங்களில் பற்றும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனின் மனிதனை துன்பத்திற்கு இட்டுச் செல்லும் மூல காரணங்களாக தன்னுடையவர் என்ற பற்று கூறப்படுகிறது. காதல், ஆசை, உறவு உள்ளிட்ட விடயங்களில் இது அடங்கும். பெண்கள் எப்போதும் மனதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
3. காமம்
புத்தர், மனதை கலங்கடிக்கும் முதல் தூண்டலாக காமத்தை காட்டுகிறார். இது ஒருவரை தர்மத்தின் பாதையிலிருந்து வழிதவறச் செய்கிறது. இதனால் பெண்கள் அவசியம் காமம் பற்றிய தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டும். “காமம் உள்ள இடத்தில் அமைதி இல்லை, அமைதி இல்லாத இடத்தில் ஞானம் இல்லை.” என்றும் பாடியுள்ளார்.
4. . சந்தேகம் / ஐயம்
அன்பிலும் உறவிலும் சந்தேகம் வந்தால், அது நிம்மதியை கெடுக்கும். ஒருவர் துறவியாக ஆன்மீக வாழ்வில் முன்னேற நினைக்கும் பொழுது, தனது உறவுகளில் ஏற்படும் சந்தேகம், நம்பிக்கையின்மை ஆகியவை மன அமைதியை கலைக்கும். முடிந்தவரை மனதை அமைதியாக வைத்திருந்தால் எப்படியான பிரச்சினைகளையும் சமாளித்துக் கொள்ளலாம். இது பெண்களுக்கு அவசியம்.
5. தன்னலம்
புத்தர் சில பெண் சிற்றப்பாசுரங்களில், தன்னலமிக்க செயல், பொறாமை, ஒழுக்கமின்மை போன்ற பண்புகளை கூறுவார்கள். ஆனால் இவை பெண்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கு பொதுவான எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். மனிதர்களாக பிறந்த அனைவரும் சமம் என்ற கருத்திற்கு வர வேண்டும். முடிந்தவரை பிறருக்கு உதவிச் செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).