இது தேவையா? ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு ரவி மோகன் கொடுத்த பதிலடி
ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு ரவி மோகன் கொடுத்த பதிலடி இணையவாசிகளை நகைக்க வைத்துள்ளது.
நடிகர் ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையே இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நேற்றைய தினத்தில் தனது கடைசி அறிக்கை என்று கூறி மிகப்பெரிய அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இதில் தனது வாழ்க்கையில் மூன்றாவதாக வந்த நபர் தான் இந்த பிரிவிற்கு காரணம் என்றும், ரவி மோகன் செல்லும் போது விலையுயர்ந்த கார் முதற்கொண்டு அனைத்தையும் எடுத்துச் சென்றதாகவும் கூறியிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்த நிலையில் ஆர்த்தி ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை சமர்பித்துள்ளார்.
அதாவது, “கணவர் ரவி மோகனிடமிருந்து மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும்” என மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜுன் 12ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜீவனாம்சம் கேட்டதற்கு பதிலடி
இதுவரையில், ஆர்த்தி அறிக்கையினை அவதானித்த ரசிகர்கள் ஆர்த்திக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது அவர் கேட்டுள்ள ஜீவனாம்சம் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படியொரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில், விளையாட்டு தொலைபேசியில் ரவி மோகன் கோல் பேசுவது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “இருந்தாலும் நக்கல் ஐயா உனக்கு..” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அத்துடன் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்திக்கு இதுவொரு பதிலடியாக அமைந்துள்ளது. ஏனெனின் ரவி மோகன் பதிவில்,“ News incoming" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
