15 நாட்களுக்கு பெண்களை மனைவியாக வாடகைக்கு விடும் நாடு எது தெரியுமா?
பெண்களை 15 நாட்களுக்கு இன்னொருவருக்கு மனைவியாக கொடுக்கின்றனர். இந்த விசித்திரமான நாடு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விசித்திர நாடு
தற்போது உலகில் மொத்தமாக 195 நாடுகள் உள்ளன. இந்த ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் ஒவ்வொரு பழக்கவழக்கம் உள்ளது. இதில் விநோத பழக்க வழக்கத்தில் முன்வரமாக இருப்பது இந்தோனேசியா தான்.
இந்த நாட்டில் எங்கும் இல்லாத ஒரு விசித்திரமான பழக்கம் காணப்படுகின்றது.
இந்த நாட்டில் ஏழைச் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பணத்தின் தேவைக்காக அந்த நாட்டிற்கு சுற்றுலா வரும் பணக்கார ஆண்களிடம் சமார் 15 நாட்களுக்கு மனைவிகளாக அனுப்பப்படுகிறார்கள்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து தங்கள் குடும்பங்களை காப்பாற்ற தான் இந்த நாட்டு பெண்கள் இதுபோன்ற தற்காலிக திருமணங்களில் நுழைகிறார்கள்.
இப்படி திருமணம் செய்து கொண்ட பெண்கள் அந்த ஆண் பயணிக்கு உடல் ஆசைகளையும், வீட்டு வேலைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஒரு பெண் விரும்பினால், ஒரு வருடத்தில் இதுபோன்ற 20-25 திருமணங்களில் ஈடுபடலாம்.
இந்தத் திருமணம் இரு தரப்பினரின் சம்மதத்துடன் ஒரு குறுகிய, நிலையான காலத்திற்குப் பின்னர் தானாகவே முடிவடைகிறது. இந்த நடைமுறை இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான புன்காக் பகுதியைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த தற்காலிக திருமணங்களில் ஈடுபடும் ஆண்கள் அவர்கள் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் போது அந்த திருமணமும் முடிவடைகிறது.
இந்த திருமண விடயங்களை பார்ப்பதற்கு இதற்கென்றே பல ஏஜென்சிகள் அங்கு காணப்படுகின்றனர். இதில் பெண் மற்றும் மாப்பிளை விருப்பம் இருந்தால் விரைவான, அங்கீகரிக்கப்படாத திருமண விழாவும் நடைபெறுகிறது.
இதை இன்பத்திருமணம் என கூறுகிறார்கள். சுற்றுலாப் பயணி புறப்பட்டதும், அந்த திருமணம் செல்லாததாக மாறுகிறது. மேலும் அந்த பெண்கள் விரும்பினால் அடுத்த திருமணத்தை தொடர்ந்து வாழ்க்கை நடத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |