சரிகமப 5-இல் அக்காவிற்கு தாயான தங்கை: முதல் பாடலிலே கண்ணீர் விட வைத்த போட்டியாளர்
சரிகமப சீசன் 5 முதற்கட்ட தெரிவில் பாடிய போட்டியாளரின் பாடலால் அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார்.
சரிகமப 5
சரிகமப சீசன் 5 இன்று ஆரம்பமாகிறது இதில் பல திறமைவாய்ந்த போட்டியாளர்கள் பங்குபெற இருக்கின்றனர். தற்போது மெஹா ஓடிஷன் இன்று நடைபெறும்.
இதில் பாடிய ஒரு போட்டியாளரின் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடுவர்களாக சுவேதா, ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஸ், மற்றும் சிறப்பு விருந்தினராக டி ராஜேந்திரன் கலந்துகொண்டுள்ளனர்.
போட்டியில் கலந்துகொண்ட பெண் மிகவும் அப்பாவியானவர். அவருக்கு தாய் போல எல்லாவற்றையும் பார்த்து செய்பவர் தான் அவளின் தங்கை.
இந்த போட்டியாளர் இந்த சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரணம் அவரின் தங்கை தான். இந்த நிலையில் போட்டியாளர் பாடிய பாடலால் அரங்கத்தில் இருந்த அனைவரும் அழுவதை காணொளியில் பார்க்க கூடியதாக உள்ளது.
இதன் பின்னர் நடுவர்களால் அவர் சரிகமப போட்டியில் தொடர தெரிவு செய்யப்படுகிறார். தன் அக்கா தெரிவு செய்ய ப்பட்ட அடுத்த நொடி தங்கை ஓடி வந்து அவரை கட்டி அணைத்து அழுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |