உடல் எடையைக் குறைக்கும் கத்திரிக்காய்! விஷமாகவும் மாறும் ஜாக்கிரதை
நமது உணவின் போதும் பல வகையான காய், கீரைகள் போன்றவற்றை துணை உணவாக கொண்டு சாப்பிடுவது பல காலமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும்.
இவ்வாறு பல காய்களை எடுத்துக்கொள்வதில் கத்திரிக்காய் ஒன்றாகும். கத்திரிக்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் காணப்படுவதுடன் சில தீமைகளும் காணப்படுகின்றது.
கத்திரிக்காயில் காணப்படும் சத்துக்கள்
கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.
நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிடலாமா? உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம்
கொழுப்பை குறைக்க உதவும்
ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும்.
இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.
சிறுவனின் கண்ணில் தெரியும் வறுமையின் வலி! கலங்க வைக்கும் காட்சி
இதயத்திற்கு ஆரோக்கியம்
கத்தரிக்காய் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது.
கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது. கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது.
இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.
வயிற்று பிரச்சினைக்கு தீர்வு
வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம்.
நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம் குறையும்.
இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
வாயுநோயை கட்டுப்படுத்துகிறது
கத்தரிக்காய் சாப்பிடுவதால் பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக் குணப்படுத்தும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.
கத்திரிக்காய் பக்க விளைவுகள்
கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் கத்தரிக்காயின் பக்க விளைவுகளைப் அதிகம். ஆமாம், சிலர் கத்திரிக்காய் சாப்பிட்ட பிறகு அரிப்பு, சொறி, சிறுநீரக கற்கள் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை ஏற்படும்.
வெயில் உங்களை சுட்டெரிக்குதா? உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள புதினா ஜூஸை இப்படி எடுத்துகோங்க!
ஒவ்வாமை
கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளுடன், சிலருக்கு கத்திரிக்காய் ஒவ்வாமை இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.
உண்மையில், இது கத்தரிக்காய் ஒவ்வாமை. கத்திரிக்காய் ஒவ்வாமை அறிகுறிகள் பொதுவாக மற்ற வகை உணவு ஒவ்வாமைகளுக்கு ஒத்ததாக இருக்கும்.
விஷமாக மாறும் கத்திரிக்காய்
கத்திரிக்காய் நைட்ரேட்டுகளின் ஒரு நல்ல ஆதாரமாகும், இது இயற்கையாகவே நம் வயிற்றில் நைட்ரைட்டுகளாக மாற்றப்படுகிறது.
பின்னர், இந்த நைட்ரேட்டுகள் புரதத்தின் அமினோ அமிலங்களுடன் வினைபுரிந்து நைட்ரோசமைன்களை உருவாக்குகின்றன.
இயற்கையாக மாற்றப்பட்ட இந்த நைட்ரோசமைன் உணவு விஷத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு கத்திரிக்காய் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் வெந்தயம்! இப்படி எடுத்து கொண்டால் போதும்
வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது
கத்திரிக்காயில் அதிக பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக அதிகப்படியான நுகர்வு உங்கள் வளர்சிதை மாற்றத்தை மோசமாக்கும்.
உண்மையில், அதிக பொட்டாசியம் வயிற்றில் தொந்தரவு உண்டாக்கி வாந்தியை ஏற்படுத்தும். கூடுதலாக, இது ஹைபர்காலேமியாவுக்கு வழிவகுக்கும்.
இதில் இரத்தத்தில் பொட்டாசியம் அதிகரிப்பது இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதேபோல், அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து உறிஞ்சுவதில் சிரமம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இந்த காரணத்திற்காக, கத்திரிக்காய் சாப்பிடலாம் ஆனால் அதிகம் இல்லை.
மாதவிடாய் சுழற்சி வேகமாக இருக்கலாம்
கத்தரிக்காயை அதிகம் சாப்பிடுவது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டும். கத்திரிக்காய் இயற்கையில் டையூரிடிக் ஆகும்.
இந்த காரணத்திற்காக கர்ப்பிணிப் பெண்கள் இதை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது மாதவிடாயைத் தூண்டும் மற்றும் மாதவிடாய் சுழற்சியை துரிதப்படுத்தும்.
கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கணுமா? இவற்றை செய்தாலே போதும்
வாயு பிரச்சனைகள்
கத்தரிக்காயை உட்கொள்வது அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும் மற்றும் இந்த காரணத்திற்காகவும் கர்ப்ப காலத்தில் கத்தரிக்காயை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், வெறும் வயிற்றிலோ அல்லது இரவிலோ கத்திரிக்காய் சாப்பிட்ட பிறகு சிலருக்கு அசிடிட்டி பிரச்சனை இருக்கும்.
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட எண்ணெய் கத்தரிக்காயை குழம்பை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி கிராமத்து வாசனை வீசும் பாட்டி ஸ்டைல் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க வேண்டுமா?
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 15,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 2,
தேங்காய் - 2 துண்டுகள்,
பூண்டு - 10 பல்,
கடுகு - 1/4 ஸ்பூன்,
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்,
தனியா பொடி – 1,
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்,
புளி தண்ணீர் - 1 கப்,
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி,
கறிவேப்பிலை - 1 கீற்று,
கொத்தமல்லி - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
இந்த விதையை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
செய்முறை
கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.
பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும். தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும். அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.
கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.
இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும். அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.
கண் பார்வை அதிகரித்து தலைவலி வருவதை தடுக்க... எளிய உணவுகள் இதை சாப்பிடலாம்
கத்திரிக்காய் பொரியல்
சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு கத்தரிக்காய் பொரியல் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சிறிய கத்தரிக்காய் - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 5 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவும் அதிசய டீ..! தினமும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாம்
செய்முறை:
கத்திரிக்காயை நீளவாட்டில் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.
மீண்டும் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் கத்திரிக்காயை நீர் வடியவிட்டு எடுத்து அதில் போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு சேர்த்துக் கலந்து மெதுவாக கிளறவும். கத்திரிக்காய் வெந்து வரும் சமயம் அரைத்து வைத்திருக்கும் பொடியை அதனுடன் கலந்து கிளறவும்.
கத்தரிக்காய் பதமாக வெந்ததும் தீயை நிறுத்தி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள்