பிரதமரின் பேரால் நின்றுப் போன திருமணம்: மணமகள் சொன்ன அதிர்ச்சி காரணம்!
திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்வின் அடுத்த அத்தியாயம் தான். இந்த திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும்.
இப்படி பெரும்பாடு பட்டு திருமணம் செய்யும் நேரத்தில் மணமகள் சில்லறைத்தனமான காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்தினால் எப்படி இருக்கும். அப்படியான சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
திருமணத்தை நிறுத்திய மணமகள்
இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் காசிபூர் மாவட்டத்தில் நசிர்பூர் பகுதியில் வசித்து வந்தவர் தான் 27 வயதான சிவசங்கர். இவருக்கு பக்கத்து ஊரில் உள்ள ரஞ்சனா என்ற பெண்ணை நிச்சயம் செய்து திருமணத்திற்கு நாள் குறித்து இருந்தார்கள் அதன்படி ஜூன் 11ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது.
இந்தத் திருமணத்தில் பாரம்பரிய முறையில் சடங்குகள் எல்லாம் நடந்துக் கொண்டிருந்த வேளையில் மணப் பெண்ணும் அவரது சகோதரர்களும் சேர்த்து மணமகனிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அந்தவொரு கேள்வியால் நின்றுப் போன திருமணம்
அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது நாட்டின் பிரதமர் யார் என ஒரு கேள்வி கேட்க அதற்கு பதில் தெரியாததால் அங்கிருந்த அனைவரும் மணமகன் சிவசங்கரை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
இதனால் கடுப்பான மணமகள் எனக்கு இப்படியொரு முட்டாளை கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது என திருமணத்தை நிறுத்தச் சொல்லிவிட்டார்.
இதனால் அங்கிருந்தவர்கள் கூடி பேசி சிவசங்கரின் சகோதரனை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் பரபரபாக்கியிருந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |