மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில் இரண்டாவது குழந்தையா? ரோபோ சங்கரின் ஆசையால் அதிர்ச்சி
நடிகர் ரோபோ ஷங்கர், வனிதாவுடன் அளித்த பேட்டி ஒன்றில் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் ரோபோ ஷங்கர்
பிரபல ரிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தவர் தான் ரோபோ சங்கர். தனது நகைச்சுவையான பேச்சினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகின்றார்.
ஆனால் சமீபத்தில் அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம் உடல் எடையை தாறுமாறாக குறைத்து எலும்பும் தோலுமாக காணப்பட்டார்.
இதற்கு காரணம் தீய பழக்கம் என்றும் சாவின் விழிம்பிற்கு சென்று திரும்பி வந்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
இரண்டு குழந்தைக்கு ஆசையா?
சமீபத்தில் வனிதாவுடன் நடந்த நேர்காணலில் பல உண்மைகளை வெளியே கூறியுள்ளார் ரோபோ சங்கர். ஆம் தனது உடல்நலப் பிரச்சினை, மகளின் திருமணம் என்று அடுத்தடுத்து கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையையும் கூறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் அவருடைய தாய் மாமாவுடன் திருமணம் நடைபெற உள்ள நிலையில், ரோபோ சங்கர் தனது இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையை கூறியுள்ளது பெரும் வைரலாக பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |