திருமணத்திற்கு மாமியார் பரிசாக அளித்த நகைகள்! திருமணத்தையே நிறுத்திய மணப்பெண்
திருமணத்திற்கு மாமியார் கொடுத்த நகையால் மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு சென்றுள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
பொய் சொல்லி திருமணம்
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பிர்ஹார் கிராமத்தில் திருமணத்திற்கு முன்பு பராத் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மணமகன் வீட்டார், மணப்பெண்ணிற்கு நகைகள் பரிசாக வழக்கியுள்ளனர். இந்த நகை மீது மணப்பெண் வீட்டாருக்கு சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து மணப்பெண் தனது தந்தையின் நண்பரான நகை வியாபாரியிடம் நகை உண்மையானதா? என சரிபாரக்கும் படி கூறியுள்ளார். அந்த நகை வியாபாரி நகையை சோதனை செய்து பார்த்த போது நகை போலியானது என தெரியவந்துள்ளது.
இதனால் கோபம் அடைந்த மணப்பெண், மணமகன் வீட்டாரிடம் ஏமாற்றி விட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நீரிழிவு நோய்க்கு வாழ்நாள் முழுவதும் குட்பை சொல்லனுமா? அற்புதம் செய்யும் ஒரே காய்
திருமணத்தை நிறுத்திய பெண்
குறித்த பெண் இறுதியாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து திருமணத்தை நிறுத்துவதற்கு கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை தீராத நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது மணமகன் வீட்டார் உண்மையான நகைகளை தருவதாக உறுதியளித்ததையடுத்து திருமணம் நடைபெற்றுள்ளது. மாமியார் வருங்கால மருமகளுக்கு போலி நகையை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.