மாஸாக என்ட்ரி கொடுக்க நினைத்த மணமக்கள்: நொடிப்பொழுதில் அரங்கேறிய அசம்பாவிதம்
சமீப காலங்களில் மணமக்கள் திருமண மண்டபத்துக்கு நுழையும் முறையிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. தேர், கார், ஊஞ்சல், கிரேன் என பல வகைகளில் ஜோடிகளின் எண்ட்ரி நடக்கிறது.
ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், ஒரு அழகான, பிரம்மாண்டமான ஊஞ்சலில் திருமணத்துக்குள் வருகிறார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக மணமகனும், மணமகளும் ஊஞ்சலில் இருந்து விழுந்து காயமடைந்து விடுகிறார்கள். இதனால், பிரம்மாண்டமாக அமைந்திருக்க வேண்டிய எண்ட்ரி பரிதாபமாகிப் போனது.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிரம்மாண்டமாக திருமண (Wedding Video) மேடைக்கும் நுழைய திட்டமிட்ட இந்த ஜோடியை வரவேற்க பின்னணி நடனக் கலைஞர்கள் நடனமாடினார்கள். வான வேடிக்கைகளும் உள்ளன. திடீரென்று, விபத்து ஏற்பட்டு, அந்த மண ஜோடி ஊஞ்சலில் இருந்து விழுந்து விடுகிறது. இருவரும் சுமார் 12 அடி உயரத்தில் இருந்து மேடையில் விழுந்தனர்.
இந்த திருமண ஜோடி கீழே விழுந்ததைக் கண்ட விருந்தினர்கள், தம்பதியினரின் உறவினர்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடத் தொடங்கினர். ஊடக செய்திகளின் படி, மணமகனும், மணமகளும் லேசான காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பொறுப்பேற்று தம்பதிக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. இந்த பரபரப்பு அடங்கியதும் அந்த ஜோடி, 30 நிமிடங்களுக்குப் பிறகு தங்கள் திருமண சடங்குகளை தொடர்ந்தனர்.
Unfortunate accident at Raipur Wedding yesterday.
— Amandeep Singh ? (@amandeep14) December 12, 2021
Thank God all are safe.
source : https://t.co/yal9Wzqt2f pic.twitter.com/ehgu4PTO8f