வெறித்தனமாக சிரித்த மணமகள்: மணமேடையில் நடந்தது என்ன?
மணப்பெண் ஒருவர் ரோகிதர் கூறிய வார்த்தைக் கேட்டு வெறித்தனமாக சிரித்த காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக, திருமணத்தின் போது பல வகையான சடங்குகள் செய்யப்படுகின்றன. திருமணத்தின் முக்கிய சடங்குகளில் தாலி கட்டும் சடங்கும், ஹோம அக்னியை சுற்றி வலம் வருவது, மாலை மாற்றுவது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இதனுடன், பல திருமணங்களில், புரோகிதர் இந்த சடங்குகளுக்கான விளக்கங்களை அளிப்பதையும் காண முடிகின்றது. இங்கும் புரோகிதர் கூறிய விளக்கத்தினை கேட்டே மணப்பெண் இவ்வாறு சிரித்துள்ளார்.
திருமணத்தின் ஏழு உறுதிமொழிகளை எடுத்துரைக்கும் போது, புரோகிதர், மாப்பிள்ளையிடம், நீங்கள் சம்பாதித்து, சம்பளத்தை மனைவி கையில் கொடுக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்ட மணப்பெண் சிரிப்பை அடக்கமுடியாமல் இவ்வாறு சிரித்துள்ளார்.