அட்டகாசமான காலை உணவு... முட்டை இட்லி எப்படி செய்யனும் தெரியுமா?
காலை நேரத்தில் வித்தியாசமான உணவாக ஒருமுறை முட்டை இட்லி செய்து பார்க்கலாம். சத்தான இந்த இட்லியை எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
காலை உணவு
பொதுவாக புதிதாக தொடங்கும் நாளில் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கு காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இரவு முழுவதும் வயிற்றில் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நிலையில், காலையில் அதனை பிரேக் செய்வதை தான் பிரேக் ஃபாஸ்ட் என்று காலை உணவை கூறுகின்றனர்.
அதே போன்று காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் அரசனைப் போன்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது சத்தான முட்டை இட்லி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 7
காய்ச்சாத பால் - 4 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 2 (துருவியது)
மிளகு - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முட்டை இட்லி செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் காய்ச்சாத பால், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது ஒரு கடாயை அடைப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி குடைமிளகாய் கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின்பு அதில் மிளகுத்தூள் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும். பின்பு கலக்கி வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
பின்பு இட்லி பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் இட்லி பதத்திற்கு ஊற்றி எடுக்கவும். தற்போது சுவையான முட்டை இட்லி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |