நீரிழிவு நோயாளிகள் எந்த உலர் பழங்களை சாப்பிடக்கூடாது?
நீரிழிவு நோயாளிகள் உலர் பழங்களை சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உலர் பழங்கள்
பொதுவாக உலர் பழங்கள் அதிக சத்துக்களையும், உடம்பை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகின்றது.
உடம்பிற்கு ஆரோக்கியத்தினை அள்ளிக் கொடுக்கும் உலர் பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு சர்க்கரை அளவை அதிகரிக்கும் உலர் பழங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேண்டாம்.
நீரிழிவு நோயாளிகள் உலர் திராட்சையை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்கவும். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அதிகளவு இயற்கை சர்க்கரையும் இருக்கின்றது. இது ரத்த சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்துகின்றது.
பேரீட்சை பழத்தினை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். பேரிட்சையில் இயற்கையான சர்க்கரை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை திடீரென உயர்த்துவதுடன், நீரிழிவு நோயாளிகளுக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
இதே போன்று அத்திப்பழத்தையும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாதாம். இதிலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு சட்டென அதிகரித்து விடுகின்றது.
கிரான்பெர்ரி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், இது சிறுநீர் தொடர்பான பிரச்சனையையும் தீர்க்க உதவியாக இருக்கும். ஆனால் இப்பழத்தினை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |