ராட்சத பன்றியால் கண்ணீர் விடும் பெண்: காரணம் என்ன?
பிரேசில் (Brazil) நாட்டின் சாவோபாலோ கடற்கரைப் பகுதியில் உள்ள பெருயிப் நகரில் ரோசாங்கலா டி லாரா என்ற பெண் வசித்து வருகிறார்.
நாய்குட்டியை வளர்ப்பதில் பிரியமாக இருந்த இவர், வித்தியாசமாக பன்றிக் குட்டி ஒன்றினை வாங்கி வளர்க்க தொடங்கியுள்ளார். குறித்த பன்றி சிறிய வகை என்று வாங்கிய அவருக்கு பின்பு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.
இந்த பன்றிக்கு லிலிகா என்ற பெயர் வைத்திருக்கும் அப்பெண் தற்போது புலம்பி வருகின்றார். 3 வயதுடைய இந்த பன்றி நாள்தோறும் 5 கிலோ பழம் மற்றும் காய்கறிகளும், இதுதவிர இதர தீனிகள் என அனைத்தையும் சாப்பிடுகிறதாம்.
3 ஆண்டுகளுக்கு முன்பு சிறியதாக வாங்கிய பன்றி தற்போது இவ்வளவு வளர்ந்துவிட்ட நிலையில், இவ்வளவு சாப்பிடும் என்று நினைக்கவில்லையாம்.
செல்லப்பிராணியாக வளர்த்துவிட்ட குறித்த பன்றியை விற்பதற்கு மனம் வராமல், சிறிய அப்பார்ட்மெண்டில் தவித்து வருகின்றார்.
குடும்ப நபர்களுக்கே இடம் இல்லாத நிலையில், 5 அடி உயரமுள்ள இந்த பன்றியினால் குழப்பத்திலும் காணப்படுகின்றார்.
செல்லப் பிராணியாக பன்றியை வளர்க்க ஆசைப்பட்டு, அதனை வளர்த்து இப்போது அது சாப்பிடும் தீனிக்காக உரிமையாளர் சோஷியல் மீடியாவில் கண்ணீர்விட்டிருப்பது நெட்டிசன்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
