குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் அதிகம் சாப்பிட வேண்டும் என சொல்ல 4 முக்கிய காரணங்கள் இவைதான்..
உலகில் அதிகமாக விளையும் காய்கறிகளில் ஒன்று தான் முட்டைக் கோஷ். குளிர் காலத்தில் முட்டைக் கோஸ் அதிகம் சாப்பிட கூறுவதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
முட்டைக் கோஸ்
ப்ரொக்கோலி, காலிஃபிளவர் மற்றும் காலே இவற்றினை உள்ளடக்கிய க்ரூசிஃபெரே குடும்பத்தைச் சேர்ந்த முட்டைக் கோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கின்றது.
குளிர்கால டயட்டிற்கு ஏற்ற காய்கறியாக முட்டைக்கோஸ் இருக்கின்றது. இவை உடல் பருமன், நீரிழிவு மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆனால் முட்டைக் கோஸை அவ்வளவாக யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இங்கு குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் ஏன் அதிகமாக சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் ஏன் முட்டைக்கோஸ் சாப்பிட வேண்டும்?
முட்டைக்கோஸில் சல்ஃபர் கன்டன்ட்டான சல்ஃபோராஃபேன் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், ஏற்கனவே உருவாக கேன்சர் செல்களையும் அழிக்கின்றது.
நாள்பட்ட அழற்சி, வீக்கம் இவற்றினை கட்டுப்படுத்த முட்டைக்கோஸ் உதயுவுகின்றது.
இந்த காயில் நிறைந்திருக்கும் அந்தோசயனின்ஸ், வைட்டமின் கே, அயோடின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை மிகவும் சக்திவாய்ந்த மூளை உணவாக வைத்துள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வலுவான மன செயல்பாடுக்கும் உதவுகின்றது.
முட்டைக்கோஸில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், உயர் ரத்த அளவைக் குறைக்க உதவி செய்கின்றது. ரத்த அழுத்தத்தினை சரியான அளவிற்கு வைத்திருக்கவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |