பக்கவாதம் ஏற்பட்ட சொந்தங்களை பார்த்துக் கொள்வது எப்படி?
Healthy Food Recipes
By DHUSHI
அஜித்தின் தந்தை பக்கவாதம் ஏற்பட்டு இயற்கை மரணம் அடைந்த நிலையில், பிரபல வைத்தியொருவர் இது சார்பாக தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
பக்க வாதம் குறித்து பூரண வழிகாட்டல்கள்
- கை, கால்கள் செயலிழந்து போனாலோ அல்லது முன்பு போல செயலாற்ற முடியாமல் திடீரென திறன் குறைந்தாலோ உதடு ஒருபக்கமாக இழுத்துக் கொண்டு சென்றாலோ, வாய் பேச இயலாமல் போனாலோ, வாய் குளறினாலோ திடீரென பக்கவாதம் ஏற்பட்டு நடக்க இயலாமல் படுத்த படுக்கையாகி விட்டாலோ நான்கரை மணிநேரத்திற்குள் பக்கவாதத்திற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவ கல்லூரிகள் அல்லது தனியார் மருத்துவ மனைகளை அடைய வேண்டும்.
- எவ்வளவு விரைவில் அடைகிறோமோ அவ்வளவு நல்லது உடனடியாக ரத்த நாள அடைப்பை சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட முழுமையாக நோயில் இருந்து குணமாக முடியும் அத்தகைய சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி ஆபத்தான காலகட்டத்தில் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும்.
- உணவு என்பது வாய்வழி உட்கொள்ள இயலாத தன்மையால் மூக்கு வழி இரைப்பை வரை குழாய் மூலம் உணவு செலுத்தப்படும் வாய்வழி கொடுத்தால் புரை ஏறி நுரையீரலுக்குள் உணவு சென்று அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு அசைவின்றி படுத்த படுக்கையாகி விடுவதால் பின்பகுதியில் படுக்கை சார்ந்த புண் உருவாகும் (BED SORES) இதுவே பக்கவாதம் பாதித்தவர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறும்.
- இவர்கள் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு மணிநேரங்களுக்கு ஒருமுறையேனும் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருப்பது புண் உருவாகாமல் தடுக்கும் செயலாகும்.
- இதற்கென பிரத்யேகமாக காற்றுப் படுக்கைகள் விற்கப்படுகின்றன. அதில் காற்றை தானியங்கிக் கருவி கொண்டு ஒரு பக்கம் மறுபக்கம் என மாறி மாறி ஊதுவதால் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க உதவும்.
- எனினும் அவ்வப்போது நாமாகவே முதுகுப்பகுதியை குதத்திற்கு மேல் பகுதிகளில் சிவப்பாக புண் தோன்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ அறிவுரையின்படி அதற்குரிய சிகிச்சை மற்றும் ட்ரெஸ்ஸிங் செய்ய வேண்டும்.
- “ எத்தனை சீக்கிரமாக இயன்முறை சிகிச்சை ஆரம்பிக்கிறோமோ? அத்தனை சீக்கிரம் பக்கவாத நோய் பாதிக்கப்பட்டவர்கள் கைகளையும் கால்களையும் மீண்டும் பழைய செயல்திறனுக்கு கொண்டு வர முடியும் வீட்டிலேயே இயன்முறை சிகிச்சை பெறும் வழியை செய்யலாம் அல்லது பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் பக்கவாதத்திற்கு என பிரத்யேகமான புனரமைப்பு மையங்களில் சேர்த்து புண்கள் ஏற்படாமல் இயன்முறை சிகிச்சை வழங்கலாம்.
- அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு ரத்தக் கொதிப்பு போன்ற இணை நோய்களை கட்டுக்குள் வைக்கும் முறையான சிகிச்சையை வழங்கிட வேண்டும். மீண்டும் பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இது உதவும்.
- ஏற்பட்ட புண்கள் ஆற நீரிழிவு கட்டுக்குள் இருப்பது அவசியம். பக்கவாதம் ஏற்பட்டவுடனே சிகிச்சைக்கு 4½ மணிநேரங்களுக்குள் விரைவு காட்ட ஆபத்தான காலம் தாண்டுமட்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும்.
-
படுக்கைப் புண்கள் தவிர்ப்பது மற்றும் விரைவாக இயன்முறை மருத்துவம் செய்வது குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும். என மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US