என்னுடைய நீண்ட நாள் கனவு..பிரமாண்ட வீட்டை கட்டி செலிபிரிட்டிகளை ஓட விட்ட KPY தீனா!
புது வீடு கட்டிய விடயத்தை புகைப்படங்களுடன் KPY தீனா கெத்தாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தீனா எப்படி மீடியாவிற்குள் வந்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் அறிமுகமாகி வெள்ளத்திரையில் தற்போது கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் நடிகர் தீனா.
இவர் மீடியாத்துறைக்கு வந்த பின்னர் இவருடைய பெயரை கூறினால் இவரை அடையாளப்படுத்த முடியாதாம். மாறாக இவரை "பிராங்க் கால்" என்று கூறினால் மாத்திரம் இவரை அடையாளப்படுத்த முடியுமாம்.
இவர் படிக்கும் காலத்திலிருந்த நன்றாக நகைச்சுவை செய்வராம். ஆனால் இவருக்கு இந்த திறமை தான் இறுதி கை கொடுக்கும் என்று அவர் இன்று வரை எதிர்பார்க்கவில்லையாம்.
இதனை தொடர்ந்து தான் பிரபல தொலைக்காட்சிக்கு வந்து தன்னுடைய நகைச்சுவை திறமையால் பலரை ஓட ஓட கலாய்த்துள்ளாராம் தீனா.
என்னுடைய நீண்ட நாள் கனவு..
இந்த நிலையில் இவர் அவருடைய சொந்த ஊரில் பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்திரைக்கு ஒரு காமடியனாக இருந்த தீனா தற்போது ஒரு கதாநாயகனாக மாறியுள்ளார் என்றால் அதற்கு தனுஷ் சார் தான் காரணம் என பல மேடைகளில் கூறியுள்ளார்.
இப்படியான ஒரு நிலையில் தன்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் என்பதை புகைப்படங்களுடன் வெளியிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த வீட்டிற்கு கிரக பிரவேசமும் நடை பெற்றுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “மீடியாவில் இருக்கும் அனைவரும் இப்படி வீடு வாங்கினால் நாங்கள் எல்லாம் எங்கு போவது” என கமண்ட் செய்து வருகிறார்கள்.