புற்றுநோய், நீரிழிவு வராமல் இருக்க வேண்டுமா? இதை தினமும் 4 மட்டும் சாப்பிட்டால் போதும்
பொதுவாக பாதாம், அக்ரூட் பருப்புகள் ஆரோக்கியமான கொட்டைகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இது ஊட்டச்சத்து நிறைந்தவை.
அதில் அக்ரூட் பருப்புகள் உடலுக்கு பலவகையான நன்மைகளை செய்யக்கூடியதாக அமைந்த ஒரு சத்துநிறைந்த பருப்பு வகைகளில் முதன்மையானதாகும்.
இதனை சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசியான இழை, புரதம், வைட்டமின்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஒமேகா 3 ஆல்பார் லினோலெனிக் அமிலம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
அதுமட்டுமின்றி தினமும் 4 அக்ரூட் பருப்புகள் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். குறிப்பாக இவை வாழ்நாள் நோயான நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்க செய்யும்.
அந்தவகையில் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
தினமும் 4 பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் எடையை கட்டுப்படுத்தி வைக்கலாம். புற்றுநோய், உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்களை விலக்கி வைக்கலாம்.
அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது அறிவாற்றல் திறன், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பிற வாழ்க்கை முறை நோய்களையும் விலக்கி வைக்கிறது.
தூக்கமின்மை பிரச்சனையை மெலடோனின் ஹார்மோன் உண்டாக்குகிறது. இந்த மெலடோனின் அக்ருட் பருப்புகளில் உள்ளது. தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் அக்ரூட் பருப்புகளை எடுத்துகொள்ளலாம். இது படிப்படியாக தூக்கத்தை வர செய்யும்.
இதய கோளாறிலிருந்து பாதுகாப்பு
ஆக்ஸிஜனேற்ற பண்புகளின் சிறந்த மூலம் இது. ஒமேகா 3 அமிலங்களும் அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு உண்டாகும் சேதத்தை குணப்படுத்துகிறது. இன்றியமையாத கொழுப்பு அமிலம் ஆகும். அக்ரூட் பருப்புகள் இதயக்கோளாறுகள் வராமல் தடுக்கின்றன.
அக்ரூட் பருப்புகள் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் கொண்டவை. இது டயட்டில் இருப்பவர்களுக்கு நன்மை செய்யும். உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பின் அளவு இதில் சரியாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும் புரதமும் உள்ளது. இது உடலுக்கு தேவையான ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தருகின்றன.
நிறைவுற்ற கொழுப்பு இல்லாமல் சாப்பிடுவது இதய நோய்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது. அதிக உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பிரச்சனை உண்டாகாமல் இருக்க, அதை தடுக்க இந்த அக்ரூட் பருப்புகள் உதவுகிறது. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளடக்கியது.
உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க செய்கிறது. மேலும் பித்தப்பையை நல்ல நிலையில் வைத்திருக்கவும் சீராக செயல்படவும் உதவுகிறது. இதை தினமும் இரவில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.