உடல் நாள நரம்புகளை சுத்தம் செய்யும் செம்பருத்தி டீ! வேறென்ன நன்மைகள் உள்ளது?
டீ என்பது இப்போது மக்கள் மத்தியில் பிரபலமானது.இதில் தங்களுக்கு விருப்பமான வகையில் எடுத்துக்கொள்வார்கள். ஆனால தற்போது உடல் ஆரோக்கியத்திற்காக வழைமைபோல குடிக்கும் டீ இல்லாமல் டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவை மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
இதுபோல தான் செம்பருத்தி டீ தற்போது பிரபலமாகி வருகின்றது. செம்பருத்தி உடலுக்கு ஏற்ற பல ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. இது உடலில் பல மாற்றங்களை செய்கிறது.
செம்பருத்தி டீயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளதால், இது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்கிறது. இதில் இருக்கும் அதிகமான நன்மை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செம்பருத்தி டீ
செம்பருத்தி டீயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமனிலைப்படுத்தும்.
செல்களின் சேதத்தில் இருந்து உடலை பாதுகாப்பதுடன் வயதாகிய தோற்றத்தை குறைக்கும். இது தவிர இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை ஓரளவிற்கு குறைக்கும் சில நேரங்களில் முற்றாகவும் குறைக்கலாம்.
சருமத்தில் வரக்கூடிய எல்லாவிதமான பிரச்சனைகளையும் இது இல்லாமல் செய்யும். உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த செம்பருத்தி பூ டீ பெரிதும் பயன்படுகிறது.
இதில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி போன்ற பண்புகள் செம்பருத்தி டீயில் உள்ளது.
இந்த டீயில் இயற்கையில் டையூரிடிக் தன்மை இருப்பதால் இது சிறுநீர் கழித்தலை அதிகரித்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், செம்பருத்தி டி ஆனது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த டீ கெட்ட கொழுப்பு மற்றும் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவும். இவை இரண்டும் இதய நோய் வருவதற்கான ஆபத்து காரணங்களாகும்.
இதை குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு தேவையான பிளவனாய்டுகள் மற்றும் மினெரல்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. இந்த செம்பருத்தி டீ உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை குறைக்கிறது.
இந்த காரணத்தினால் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் செம்பருத்தி டீயில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட்களின் அளவு மிக அதிகமாக இருப்பதால் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடை குறைக்க உதவும்.
உடலின் நச்சு நீக்கம் செய்வதில் கல்லீரல் முக்கியம் பெறுகின்றது. செம்பருத்தி டீ ஹெபடோப்ரோடெக்டிவ் பண்புகளைக் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இதனால் நச்சுகள் மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலைப் பாதுகாக்கிறது. செம்பருத்தி டீயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளது.
வைட்டமின் சி ஆனது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்க உதவுகிறது.
கூடுதலாக, செம்பருத்தி டீயில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் கொண்டுள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
செரிமான பிரச்சனை இருப்பவர்கள் இந்த டீயை குடிக்கலாம். இது மலச்சிக்கலைப் போக்கவும், குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும், இது அஜீரணம், வீக்கம் அல்லது தசைப்பிடிப்பு ஆகியவற்றைப் போக்க உதவுகிறது.
செம்பருத்தி டீயில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |