சுகரை கட்டுப்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் கருப்பு அரிசி தோசை
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது.
அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும். இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம்.
சக்கரை நோயைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கொழுப்புக்களை குறைக்க உதவும் கருப்பு அரிசி தோசை.இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு அரிசி - 1 கிண்ணம்
உளுந்து - 1/4 கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் 8 மணிநேரம் புளிக்கவிட்டு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து தோசை போல ஊற்றி எடுத்து விரும்பிய சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையான சத்தான கருப்பு அரிசி தோசை தயார்.