பெண்ணை ஆக்குரோஷமாக தாக்கும் Black mamba பாம்பு... பதறவைக்கும் வைரல் காணொளி!
பெண்ணொருவர் கொடிய விஷத்தன்மை கொண்ட கருப்பு மாம்பா(black mamba) பாம்பை அசால்ட்டாக பிடிக்க முயலும் காட்சியடங்கிய கானொணியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே கருப்பு மாம்பாக்கள் வேகமானவை, பதட்டமானவை, கொடிய விஷத்தன்மை கொண்டவை, மேலும் இந்த வகை பாம்புகள் அச்சுறுத்தப்படும்போது மிகவும் ஆக்ரோஷமாக அசுர வேகத்தில் தாக்கும் தன்மை கொண்டவை.

ஏராளமான மனித இறப்புகளுக்கு இவை காரணமாக இருப்பதாகவும் ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது. மேலும் ஆப்பிரிக்க புராணங்களிலும் இது பற்றிய குறிப்புகள் அதிகளவில் காணப்படுகின்றது.
இந்தக் காரணங்களுக்காக, கருப்பு மாம்பா உலகின் மிக கொடிய பாம்பாக அறியப்படுகின்றது. கருப்பு மாம்பாக்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சவன்னாக்கள் மற்றும் பாறை மலைகளில் செரிந்து வாழ்கின்றன.

ஆப்பிரிக்காவின் மிக நீளமான விஷ பாம்புகளாக அறியப்படும் அவை 14 அடி (4.5 மீட்டர்) நீளம் வரை வளரக்கூடியது. அவை மணிக்கு 12.5 மைல்கள் (மணிக்கு 20 கிலோமீட்டர்) வேகத்தில் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |