உள்ளே வா.. மழையில் மனைந்த ரக்ஷிதாவை செல்லமாக கண்டித்த ராபர்ட் மாஸ்டர்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 தொடக்கத்திலேயே களைகட்டத் தொடங்கிவிட்டது.
மற்ற சீசன்களை காட்டிலும் ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் மோதிக்கொள்ள சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
கமல்ஹாசன் இந்த சீசனில் மிகவும் கண்டிப்புடன் எடுத்துரைப்பதால் ரசிகர்கள் சூப்பர் ஆண்டவரே, அப்படித்தான் என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
நடிப்பில் அசத்திய ரக்ஷிதா
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அணிகளாக பிரிந்து நாடகங்களில் நடித்தனர், இதில் ரக்ஷிதா, விக்ரமன், அமுதவாணன், ராபர்ட், செரினா, ஜனனி, ஆயிஷா, குயின்ஸி உள்ளிட்ட அனைவரும் நடித்தனர்.
இதில் குடும்பத்தலைவியாக ரக்ஷிதா பட்டையை கிளப்பினார், சேலை அணிந்து கம்பீரமாக நடந்து வந்த ரக்ஷிதாவை ராபர்ட் மாஸ்டர் புகழ்ந்து தள்ளினார்.
அவரை பார்த்து பயந்தபடி அவர் செய்த சேட்டைகள் சூப்பர், ரக்ஷிதாவும் பதிலுக்கு மிரட்டினார்.
செல்லமாக அதட்டிய ராபர்ட் மாஸ்டர்
டாஸ்க் முடிந்த பின்னர் மழை பெய்யத் தொடங்கியது, ரக்ஷிதா மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்டார்.
இதைப்பார்த்த ராபர்ட் மாஸ்டர் செல்லமாக, ஏய் சளி பிடித்துவிடும், காய்ச்சல் வந்துவிடும், உள்ள வா, சொன்னா கேளு என அதட்டினார்.
ஆனாலும் ரக்ஷிதா வர மறுக்க, அந்நேரத்தில் அமுதவாணன் மாஸ்டர் மழையில் டான்ஸ் போடுங்க என கூற, ” அட நானே அவளை திட்டிட்டு இருக்கேன்” என பதிலளித்தார்.