மன வருத்தத்துடன் இருக்கும் ரக்சிதா: வீடியோவால் கவலையடையும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ரக்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான பதிவை ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் மகாலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் ரக்சிதா மகாலட்சுமி.
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தத வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்கள்.
பின்னர் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருந்தார். பிக்பாஸ் சென்றவுடன் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கூடியது.
அப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் காதல் வலையில் சிக்கி அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார்.
சோகமான பதிவு
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான கருத்தோடு வீடியோ ஒன்றைப் பதிவிவிட்டிருக்கிறார்.
அதில், தனியாக பயணிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுடன் தொடங்கிய பலர் எப்போதும் உங்களுடன் இருக்க மாட்டார்கள் என பதிவிட்டிருக்கிறார்.
இதனை பார்ந்த பலரும் ஏன் இப்படி மன வருத்தமாக இருக்கிறீர்கள் என கேட்டுவருகிறார்கள்.