பிக்பாஸ் வீட்டில் தன்னை கற்புக்கரசியாக காட்ட முயற்சிக்கிறார் ரக்ஷிதா! உண்மையை உடைத்த பிரபலம்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் ரக்ஷிதா பொய் வேடமிட்டு இருப்பதாக பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீரியல்களில் அறிமுகம்
ரக்ஷிதா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற சீரியல் மூலம் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், போன்ற சீரியலில்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார்.
மேலும் இவரது யதார்த்தமான நடிப்பில் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தியது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராகவும் தற்போது வலம் வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ரக்ஷிதா
இவர் தன்னுடைய சீரியல்களில் துடிதுடிப்பாக நடித்து பிக் பாஸ் வீட்டில் எதும் தவறு செய்து விடக்கூடாது என்பதற்காக உண்மையான குணத்தையே மறைத்துக் கொண்டிருக்கிறார்.
இதனை பல தடவைகள் ரசிகர்கள், கமல், போட்டியாளர்கள் என பல வலியுறுத்தியும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களை கடந்துள்ளது. இன்று வரை அவர் போலியாகவே இருந்து வருகிறார்.
காதல் சர்ச்சை
மேலும் இதற்கு திருப்புமுனையாக ராபர்ட் மாஸ்டர் காதலிப்பதாக ரக்ஷிதா பின் சுற்றியும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மக்கள் வெறுப்பாகி ராபர்ட் மாஸ்டரை வெளியேற்றி விட்டார்கள்.
இதனால் ரக்ஷிதா சக போட்டியாளர்கள் மத்தியில் அதிகமாக வெறுக்கபட்டு வந்தாலும், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட சரோஜா தேவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களையும், கமல்ஹாசனையும் அதிகமாக கவர்ந்தார். கமல்ஹாசன் ரக்ஷிதாவிற்கு வாழ்த்தும் கூறினார்.
விமர்சகர்களிடம் வசமாக சிக்கிய பிரபலம்
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பயில்வாண் ரங்கநாதன், “சரோஜா தேவியாக கதாபாத்திரத்தில் ஆண்களுடன் சேர்ந்து ஆடும் காட்சியில் அசீம் தயாராக இருந்தார். ஆனால் யாரையும் அனுமதிக்காமல் தனலெட்சுமியுடன் சேர்ந்து நடனமாடினார்.
மேலும் இவ்வாறு இவர் நடந்துக் கொள்வதால் கற்புக்கரசியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் ” என படு கேவலமாக விமர்ச்சித்துள்ளார்.
இதனை தொடர்ந்து “சீரியல்களில் ஆண்களுடன் நடிக்கும் ரக்ஷிதாவிற்கு பிக் பாஸ் வீட்டில் மட்டும் தயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன?” என்ற அடுத்தடுத்து பதற விடும் கேள்விகளை ஊடகத்தின் முன் வைத்துள்ளார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் சற்று சிந்தித்து வருகிறார்கள்.