நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் பிக்பாஸ் கவின்: முன்னாள் காதலியை வம்பிழுக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி சினிமாவில் வளர்ந்து வரும் கவின் தற்போது திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்த வேளையில் முன்னாள் காதலியான லாஸ்லியாவை சீண்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் கவின்
பிக்பாஸ் கவினும் விஜய் டிவியின் வாரிசு தான். இவர் இந்த தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக அடுத்தடுத்து சில சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதிலும் அவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரம் இவரை இன்னும் பிரபலமாக்கியது. சீரியலில் பிரபலமாகியப் பின் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்று சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
பின்னர் தான் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவில் வெற்றிப் பெறாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.
பிக்பாஸிற்கு பிறகு இவருக்கு பல படவாய்ப்புகள் வர லிப்ட் மற்றும் டாடா போன்ற வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து ரசிகர்களிடம் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
கவினின் முன்னாள் காதலி
கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த வேளையில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவை காதலித்து வந்தார்கள் ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் இருவரும் அவரவர்களின் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்நிலையில், கவினுக்கு ஆகஸ்ட் 20ஆம் திகதி தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தசமயத்தில் லாஸ்லியா நேற்று தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு லாஸ்லியா கவின் திருமணம் என்ற தகவல்களை அறிந்துக் கொண்டுதான் இந்தப் பதிவினை வெளியிட்டிருக்கிறார் என நெட்டிசன்கள் பலரும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |