முயற்சியை கை விடாமல் தொடர்ந்தும் தீவிரமாக உடல் எடையைக் குறைக்கும் லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா மரியநேசன் தற்போது தன் உடல் எடைக் குறைப்பத்தில் இன்னும் அதீத தீவிரம் காட்டி வரும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் லாஸ்லியா
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்.
படவாய்ப்புகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு முதன் முதலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்குப் பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்த கூகுள் குட்டப்பா என்றப் படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களிற்குப் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டது. இதனால் அவர் சில சில விளம்பரங்களில் நடித்து வந்தார்.
இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று சொல்லி உடல் எடையைக் குறைத்து அதிக கவர்ச்சிக் காட்டத் தொடங்கினார். இதனால் இவர் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
இந்நிலையில், இன்னும் தனது உடல் எடையைக் குறைப்பதற்காக வேர்க்அவுட் செய்யும் காட்சிகளை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனைக் கவனித்த நெட்டிசன்கள் இன்னும் உடல் எடையைக் குறைக்க காரணம் என்ன என கேட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |