திடீரென குடும்ப குத்து விளக்காக மாறிய இலங்கைப் பிரபலம்: சொக்கிப்போன இணையவாசிகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள்மத்தியில் இடம்பிடித்த நடிகை இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா. இவர் மங்களகரமாக பட்டுப்புடவை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
லாஸ்லியா மரியநேசன்
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் இலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அழகான பட்டுப்புடவையில் அழகாக ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.