பெட்ரூமில் இருந்தபடி ரீல்ஸ் செய்து வெளியிட்ட பிரபலம்! நகைப்புக்குள்ளாக்கும் காட்சி
இந்த உலகத்துல என்னை விட யாரும் நல்லவங்க இல்லை என பிக்பாஸ் ஜனனி கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மீடியாத்துறைக்கு எப்படி வந்தார் தெரியுமா?
இலங்கையை பிறப்பிடமாக் கொண்டு இந்தியாவில் தற்போது தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் ஜனனி.
இவர் ஆரம்பத்தில் ஐபிசி தமிழ் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
இவரின் தீவிர முயற்சி தான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என ஜனனி ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “லியோ” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனனியின் அலப்பறைகள்
இந்த நிலையில் இவரின் திரைப்பட வாய்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளப்பக்கம் சென்றாலும் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கக்கூடியதாகவுள்ளது.
மேலும் பிக்பாஸ் ஜனனி, “ இந்த உலகத்தில் என்னை விட நல்லவங்க யாரும் இல்லை” என கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள்,“ வரவர உங்க கிரின்ஜிக்கு அளவு இல்லாமல் இருக்கிறது” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.