மகனுக்கு இந்தியா என்று பெயர் வைத்த பாகிஸ்தான் நபர்! சுவாரசியமான பின்னணி
பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி ஒருவர் தங்களது மகனுக்கு இந்தியா என்று பெயர் சூட்டியுள்ளதாக முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.
இந்தியா என்று பெயர் சூட்டியது ஏன்?
பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களது மகனுக்கு வித்தியாசமாக இந்தியா என பெயரிட்டுள்ளதோடு, புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர்.
ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர். இவருக்கும் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், புகைப்படத்தினை முகநூலில் பதிவிட்டுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே சிறுவன் ஒருவனும் தூங்கியுள்ளான்.
மேலும், அந்த பதிவில் அறிவுரை ஒன்றையும் புதிதாக பெற்றோர்களான தம்பதிக்கு வழங்கி இருக்கின்றனர். மகன் மீது இருந்த பாசத்தினால் தங்களுடன் தூங்க வைத்த இந்த தம்பதிகள், சிறுவன் வளர்ந்த பின்பும் தங்களது அறையையே தூங்குவதற்கு பயன்படுத்துகின்றான்...அவனுக்கு தனி அறை கொடுத்தும் போகவில்லை...
தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர், எனது மனைவி வங்கதேசத்தைச் சேர்ந்தவர் இருவருக்கும் இடையே படுத்திருக்கும் எனது மகன் இப்ராஹிமுக்கு தற்போது இந்தியா என்று புதிய பெயர் சூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
எனது வாழ்க்கையில் அவ்வப்போது இந்தியா என் வாழ்க்கையில் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது" என ஒமர் குறிப்பிட்டுள்ளார். இதனை அவதானித்த பலரும் இப்ராஹிமுக்கு தங்களது நகைச்சுவையான பதிலை கொடுத்து வருகின்றனர்.