என்னை மாதிரி கெட்டவள் யாரும் கிடையாது! பிக்பாஸில் ஜனனி
பிக்பாஸ் போட்டியில் இலங்கை போட்டியாளரான ஜனனி, என்னைப் போல் கெட்டவள் யாரும் கிடையாது என பேசியது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
உலகளாவிய மக்களால் விரும்பி பார்க்கப்படும் பிக்பாஸ் போட்டி, இந்த சீசன் சற்று வேறு விதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் சின்னத்திரை பிரபலங்கள், கொமடியாளர்கள், டிக்டாக் பிரபலங்கள் என பல முன்னணி பிரபலங்கள் தான் களமிறங்கி விளையாடி வருகிறார்கள்.
இந்த சீசனில் போட்டியாளர்கள் தானாக வெளியே செல்ல விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது ஒரு போட்டிக்கான விதிமுறைகளை மீறும் செயல் எனவும் ரசிகர்கள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜனனி
இதனை தொடர்ந்து நாட்கள் செல்ல பிரபலங்களின் உண்மை முகம் வெளிவர ஆரம்பமாகியுள்ளது. இதன் படி பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் கொடுக்கபட்ட டாஸ்க்களில் ஜனனி கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் பிக் பாஸ் ஜனனியை விளையாடவிடாமல் வெளியேற்றியுள்ளார்கள்.
இதனால் கோபமடைந்த ஜனனி, நான் நல்லவங்களுக்கு மட்டும் தான் நல்லம், என்னிடம் மோதினால் என்னைப் போல் கெட்டவள் யாரும் கிடையாது என பேசியுள்ளார்.