விஜய் மகன் சினிமாவுக்கு வருவது எப்போது? பதறியப்படியே பேசிய தளபதி விஜய்!
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகிறது.
இசை வெளியிட்டு விழா நடைபெறாததால், படத்தின் புரமோசனுக்காக நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்று இயக்குநர் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஜய்.
தளபதி விஜய் 10 வருடமாக பேட்டி கொடுக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?
சினிமாவுக்கு வருவது எப்போது?
இந்நிலையில், பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், மகன் ஜேசன் சஞ்சய் எப்போது சினிமாவுக்கு வரப்போகிறார் என்ற கேள்விக்கு, சஞ்சய் நடிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவனது முடிவில் தலையிடுவதில்லை என தெரிவித்தார்.
ஒருமுறை, ப்ரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னைப் பார்ப்பதற்கு நேரம் கேட்டிருந்தார். எனக்குதான் கதை சொல்லப் போகிறார் என்று நினைத்தேன்.
ஆனால், அவர் சஞ்சய்க்கு கதை கூறினார். அந்தக் கதையில் சஞ்சய் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால், சஞ்சய் என்னை இரண்டு வருடம் விட்டுவிடுங்கள் எனக்கூறிவிட்டார் என விஜய் தெரிவித்தார். இதனால், நடிகர் விஜய் மகன் சினிமாவுக்கு வர இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் என்பது தெரிகிறது.