ஹீரோவானார் பிக்பொஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்!
பிக்பொஸ் சீசன் 4. சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமே இல்லாத சீசன் அது.
இதில் பிக்பொஸ்ஸின் ரசிகர்களை அதிகப்படுத்திய சில போட்டியாளர்களில் பாலாஜியும் ஒருவர். இவர் அதில் போட்டியாளராக இருந்த ஷிவானியுடன் காதல் விடயத்தில் கிசுகிசுக்கப்பட்டார்.
பாலாஜிக்காகவே அந்த சீசனை பார்க்கலாம் என்று பார்த்தவர்களும் உண்டு. அந்தளவுக்கு இவர் போட்ட சண்டைகளாக இருக்கட்டும், இவரது விளையாட்டாக இருக்கட்டும், மற்றவர்கள் மீது காட்டிய அன்பாக இருக்கட்டும், தனது குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட விடயமாக இருக்கட்டும்...
image - Pinterest
அனைத்துமே இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது.
இவர் பிக்பொஸ் சீசன் 4 ஐத் தொடர்ந்து பிக்பொஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
image - ott play
அண்மையில் தான் கார் வாங்கியதையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இவர் புதிதாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதன் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.