சிம்புவின் படத்தில் சின்ன பையனா நடிச்ச பாலாஜி.... எந்த படம் தெரியுமா ? காட்டுத் தீயாய் பரவும் தகவல்
சிம்பு தென்னிந்திய சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் அதில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பாலாஜி வல்லவன் படத்தில் சிறுவனாக நடித்தது குறித்த அனுபவத்தை கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு இயக்குனர் சிலம்பரசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வல்லவன்.
இந்த படத்தில் சிம்பு, நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதே போல் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலில் சிம்புவின் கையை பிடித்து குழந்தைகள் நடனம் ஆடி இருப்பார்கள்.
அந்த சிறுவயது பிள்ளைகளில் ஒருவராக பாலாஜியும் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து தான் பாலாஜி நிகழ்ச்சியில் சிம்புவிடம் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், நீங்கள் வல்லவன் படத்தில் கருப்பு நிற ஆடையில் செம மாஸாக வந்திருப்பீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.