மேடையில் மகளின் நடனம்! கீழே நின்ற தந்தை ஹீரோவாக மாறிய தருணம்
பள்ளி ஒன்றில் மகள் நடனமாடியுள்ள நிலையில், அவதானித்துக் கொண்டிருந்த நிலையில் தன்னை அறியாமலேயே மகளுக்கு நடனத்தை கற்றுக்கொடுத்த தந்தையின் காணொளி வைரலாகி வருகின்றது.
மகளுக்காக தந்தை ஆடிய நடனம்
பொதுவாக பள்ளிகளில் வருடம் முடியும் தருவாயில் ஆண்டுவிழா நடத்துவதுண்டு. இந்த கொண்டாட்டத்தில் குழந்தைகள் நடமாடும் நிகழ்வும் நடைபெறும்.
இங்கு குறித்த காட்சியில், புகழ்பெற்ற பாடகர் டாலர் மெஹந்தியின் டுனக் டுனக் பாடலுக்கு சிறுமிகள் சேர்ந்து நடனம் ஆடுகின்றனர். அந்த சூழ்நிலையில் மேடையில் நடனமாடும் சிறுமியின் தந்தை ஒருவர் கீழே இருந்தபடி அதனை ஆர்வத்துடன் பார்க்கிறார்.
பின்னர் தனது மகளைப் போலவே கீழே இருந்தபடியே அவரும் நடனமாடுகிறார். தந்தையும் மகளும் ஒரே போல நடனமாடுவதை அங்கிருந்த பலர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
இக்காட்சியினை ஐபிஎஸ் அதிகாரியான தீபன்ஷு கப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், பலரும் லைக்ஸைக் குறித்துள்ள நிலையில், பல கருத்துக்களையும் பதிவிட்டு இருக்கின்றனர்.
”பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது அப்பாவுடைய அர்ப்பணிப்பு என்ன என்பது இதில் விளங்குகிறது" என்றும் மற்றொருவர் "குழந்தைகளின் வளர்ச்சிக்கு தந்தையர் என்றுமே துணை நிற்பது உண்டு" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
And the #FatherOfTheYear Award goes to... ? pic.twitter.com/iqDyp4Fqkr
— Dipanshu Kabra (@ipskabra) February 7, 2023