பிக்பாஸ் வீட்டில் சௌந்தர்யாவால் வெடிக்கும் சண்டை- கும்பலாக சேர்ந்து எடுத்த முடிவு
பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களுடன் இணைந்து கொண்டு சௌந்தர்யா செய்யும் வேலை குறிப்பிட்ட சிலருக்கு பிடிக்கவில்லை.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கப்போகின்ற அந்த 100 நாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.
கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகளை காரணமாக வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது பலரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தமாக18 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பொழுது இருந்தார்கள்.
தற்போது 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஏழு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பிளான் போடும் பவித்திரா
இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் நேருக்கு நேர் போட்டியாளர்களை வைத்து நாமினேஷன் நடந்தது.
அந்த சமயத்தில் மற்ற போட்டியாளர்களை பிக்பாஸ் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்த விதம் சிலருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் சௌந்தர்யா பிக்பாஸ் வீட்டில் குறிப்பிட்ட சிலரை தன்வசப்படுத்திக் கொண்டு கேம் விளையாடுகிறார் என பவித்திரா புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |