கன்னட நடிகை சோபிதா மரணம்- விபரீத முடிவிற்கான காரணம் என்ன? குழம்பத்தில் குடும்பத்தினர்
கன்னட நடிகை சோபிதா சிவான்னா திடீர் மரணமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சோபிதா சிவான்னா மரணம்
சினிமா மற்றும் சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகை கன்னட நடிகை சோபிதா சிவான்னா.
இவர், நேற்றைய தினம் ஐதராபாத்தில் திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு திருமணமாகி கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில் இவரது மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சோபிதா சிவான்னாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கர்நாடகாவில் இருந்து உடனடியாக ஐதராபாத் விரைந்துள்ளனர்.
மகளின் மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பதிவு
இந்த நிலையில் ஜாக்பாட், அபார்ட்மெண்ட் டூ மர்டர், வந்தனா போன்ற படங்களில் நடித்து விட்டு, பிறகு தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அடுத்ததாக சோபிதா நடிப்பில் முதல் நாள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகவுள்ளதால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சோபிதாவின் இந்த விபரீத முடிவிற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |