முகத்திற்கு நேராக நடந்த நாமினேஷன்- நடிக்காதீங்க.. வன்மத்தை கொட்டிய Housemates
தன்னிடம் இருந்த வன்மத்தை கொட்டி இரண்டு போட்டியாளர்களை Housemates நாமினேட் செய்துள்ளனர்.
பிக்பாஸ் 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
கடந்த சீசனில் எப்படி பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர்.
இந்த இரு அணிக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி மற்றும் சிவக்குமார் ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
நாமினேஷன் லிஸ்ட்
இந்த நிலையில், இன்றைய தினம் எட்டாவது வாரத்திற்கான நாமினேஷன் செயன்முறை நடந்து முடிந்துள்ளது. போட்டியாளர்கள் இந்த வாரம் வீட்டில் இருக்கக்கூடாத இரண்டு போட்டியாளர்களை தெரிவு செய்து கூறும்படி பிக்பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார்.
அதில், “எதிர்மறையான தாக்கங்கள் மற்றும் தான் உங்களிடம் இருக்கிறது, மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பிடிக்கவில்லை என மஞ்சரியும், உண்மையான முகத்தை வெளியில் காட்டாமல் நடிக்கிறார்..” என பவித்திராவும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி பவித்திரா, ஆனந்தி, முத்துகுமரன், சாச்சனா, ராணவ் ஆகியோர் நாமினேஷனில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |