போட்டியை விட்டு வெளியேறிய சிவகுமாருக்கு பிக் பாஸால் வாரி வழங்கிய சம்பளம் இவ்வளவா?
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சென்ற சிவகுமாருக்கு நிகழ்ச்சியால் கொடுக்கபட்ட சம்பளம் பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
சிவகுமார் சம்பள விபரம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 50 நாட்கள் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரத்திற்கு வாரம் குறைவான வாக்குகள் பெற்ற மற்றும் கன்டன்ட் கொடுக்காத போட்டியாளர்கள் வார இறுதியில் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகிய 6 பேர் இதுவரை எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி இருந்த நிலையில், அதில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சாச்சனா குறைவான ஓட்டுக்களை பெற்றிருந்தார்.
ஆனால் சாச்சனாவிற்கு பதிலாக இந்த வாரம் சிவகுமார் வெளியேறி சென்றுள்ளார். இவர் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் இருந்த நாட்கள் 28 ஆகும்.
இதன்படி ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. எனவே அவர் தங்கி இருந்த 28 நாட்களுக்கு மொத்தமாக அவருக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |