சரிகமப-வில் நடுவர்கள் கண்ணீரில் மூழ்கிய தருணம்! பணத்தால் ஆசீர்வதித்த ஸ்ரீநிவாஸ்
சரிகமப நிகழ்ச்சியில் சீசன் 4 வின் லிட்டில் சாம்பியன்ஸ் நடைபெற்று கொண்டு வருகின்றது. இதில் தற்போது டூயட் சுற்றில் போட்டியாளர்கள் பாடல் பாடி அசத்தி வருகின்றனர். இதில் போட்டியாளர் திவினேஷின் பாடல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சரிகமப
தற்போது சரிகமப வில் லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர். இதில் இரண்டு சுற்றுக்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது சுற்றாக டூயட் சுற்றில் போட்டியாளர்கள் இருவர் இருவராக பாடி அசத்தி வருகின்றனர்.
இந்த வாரம் இன்றைய எபிசோட்டில் திவினேஷ் மற்றும் தியா நயன் பாடிய பாடல் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. சுமார் 60 களில் வந்த பாடல்களை இன்றும் அதன் புதுத்தன்மை மாறாதவாறு பாடியுள்ளனர்.
அவர்கள் பாடிய பாடல் 'மலர்ந்தும் மலராத' என்ற எம்.எஸ்.வி இன் பாடலாகும். இந்த பாடலை கேட்டு நடுவரான ஸ்வேதா மோகன் எழுந்து வந்து இரண்டு போட்டியாளர்களையும் கட்டியணைத்து அழுதபடியே பாராட்டினார்.
அடுத்து நடுவர் ஸ்ரீனிவாஸ் தியா நயன் மற்றும் திவினேஷை பாராட்டியதோடு இவர்களின் பாடலுக்கு நான் ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் மேடைக்கு எழுந்து வந்து பணம் கொடுத்து ஆசீர்வதித்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |