ஆடைகளை வாசலில் வீசிய பார்வதி.. கொந்தளிக்கும் கனி- சண்டைக்கு தீர்வு பிக்பாஸ் கொடுப்பாரா?
பிக்பாஸ் வீட்டில் கனியுடைய ஆடைகளை பார்வதி வீட்டு வாசலில் வைத்து சென்றதால் கனிக்கு கோபம் வந்து விடுகிறது. இதனால் மன்னிப்பு கேட்டால் தான் ஆடைகளை எடுப்பேன் என இருவரும் வாசலில் அமர்ந்து போராட்டம் செய்கிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடும் விவாதங்களுக்கு மத்தியில் மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா மற்றும் ஆதிரை இருவரும் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனியை எதிர்க்கும் பார்வதி
இந்த நிலையில், நான்காவது வாரம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் காலையில், கனியுடைய ஆடைகளை பார்வதி அவர் கையில் கொடுக்காமல் வாசலில் வைத்து செல்கிறார்.

பார்வதி இவ்வாறு நடந்து கொண்டது, கனிக்கு மிகுந்த மன வறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த கனி, “என்னுடைய ஆடைகளை இப்படி வீசியதற்கு மன்னிப்பு கேட்டால் தான் அந்த ஆடைகளை என்னால் எடுக்க முடியும்..” என கேட்கிறார்.
அதற்கு பார்வதியோ என்னால் முடியாது என கூறி விடுகிறார். இருவரும் இப்படி சண்டை மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு பிக்பாஸ் முடிவு கூறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |