பிக் பாஸில் குறைவான வாக்குகள் ஆனால் வெளியேறப்போவதில்லை! தற்போது வெளியான Elimination Voting
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற உள்ள போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 17போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வாரம் ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்ஸ் டாஸ்க் நடைபெற்று முடிந்தது.
இதில் டெவில்ஸாக பெர்போமன்ஸ் செய்தவர்கள் துளியும் இரக்கம் காட்டாமல் டாஸ்க்கை அருமையாக விளையாடினார்கள். இதில் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா சரிவர விளையாடவில்லை.
இதில் அன்ஸிதா மனதளவில் பாதிக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற சம்பவமும் பார்க்ககூடியதாக இருந்தது. இதன் பின்னர் இதில் ஏஞ்சல் வெர்சஸ் டெவில் டாஸ்க்கின் முடிவில் அதில் சிறப்பாக பங்கெடுத்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.
அதில் மஞ்சரி சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸும் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த போட்டியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்கள்.
அந்த வகையில் முத்துக்குமரன் 25.95% வாக்குகள் (198,099 வாக்குகள்) பெற்று முன்னணியில் உள்ளார்.சௌந்தர்யா 14.63% (111,687 வாக்குகள்) பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார், ஜாக்குலின் 9.44% (72,080 வாக்குகள்) பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ரானவ் 8.77% (66,946 வாக்குகள்), பவித்ரா ஜனனி 6.92% (52,848 வாக்குகள்) பெற்றுள்ளார். மேலும் கீழே, மஞ்சரி (6.2%), சத்யா (5.61%), ரஞ்சித் (5.17%), மற்றும் ரேயான் (5.08%) ஆகியோர் தங்கள் வாக்கு எண்ணிக்கையில் ஓரளவு வித்தியாசத்துடன், ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த வாக்கிலும் குறைவாக தர்ஷிகா (4.5%), ஆனந்தி (4.42%), மற்றும் சச்சனா (3.31%) மிகக் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த வாக்குகளின் அடிப்படையில் சாச்சனா தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.
ஆனால் சாச்சனாவை வெளியேற்றுவார்களா? இல்லை வேறு போட்டியாளர்களை வெளியேற்றுவார்களா? என்பதை நாளைய எபிசோட்டில் பார்க்க முடியும். ஆனால் தற்போது வரை வெளியான தகவலின் படி சாச்சனா இந்த வாரமும் வெளியேற வாய்ப்புகள் குறைவாகதான் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |