பிக் பாஸ் அர்ச்சனாவிடம் தரம் குறைவாக பேசிய முத்துக்குமரனின் ரசிகர்கள்! அருணால் வந்த நிலை
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முத்துக்குமரனின் ரசிகர்கள் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் டைடில் வின்னரான அர்ச்சனாவை தரங்குறைவாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தவர். இவர் சீரியல் நடிகரும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் அருணை காதலித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அருண் பிரசாத், முதல் சில நாட்கள் அமைதியாக இருந்து தற்போது எல்லோருடனும் சண்டையிட்டு வருகிறார்.
அதிலும் அதிக வாக்குகள் பெற்று நிகழ்ச்சியில் முன்னிலையில் இருக்கும் முத்துக்குமரனுடன் சண்டை போட்டு வருகிறார். இந்த காரணத்தினால் அருண் பிரசாத்தின் காதலி அர்ச்சனாவிற்கு முத்துக்குமரனின் ரசிகர்களால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இது தற்போது இணையத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. கடந்த வாரம் அர்ச்சனா ஒரு தோழியாக அருணுக்கு ஆதரவளித்து வருவதாகவும் அவரின் செயல்களுக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இதையும் மீறி முத்துக்குமரனின் ரசிகர்கள் அர்ச்சனாவிற்கு மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டதில் பேசியது ' வாழ்க்கை என்பது கிரிக்கெட் மாதிரி, தங்களுக்கு பிடித்த அணி கடைசி போட்டி விளையாடினாலும் அவர்களுக்கு ஆதரவளிக்க தவறுவதில்லை.
எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. ஆசிட் வீசுவதாக மிரட்டுகிறார்கள். நான் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டுக்கு ஒரு எக்ஸாம்பில் தான், எனக்கு இதுபோல் எக்கச்சக்கமான மிரட்டல்கள் வந்துள்ளன.
இது எல்லைமீறிய ஒன்று. தவறான தகவல்களை பரப்புபவர்கள் கவனத்திற்கு நான் சம்பந்தப்பட்ட பக்கங்கள் மீதும் அதன் அட்மின்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்' என கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |