சரிகமப-வில் சபரிமலை தரிசன குறையை தீர்த்து வைத்த போட்டியாளர்கள்! மெய்சிலிர்த்த தருணம்
இந்த வாரம் பக்தி பாடல் சுற்றில் ஐய்யப்பன் பாடலை பக்தியுடன் இரண்டு போட்டியாளர்கள் பாடியுள்ளனர். இது இன்று ஒலிப்பரப்பாக்கப்பட உள்ளது.
சரிகமப
தற்போது சரிகமபவில் லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இதில் நான்கு போட்டியாளர்கள் கடந்த வாரம் போட்டியை விட்டு வெளியேறி சென்றனர்.
இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான திறமையை காட்டி வருகின்றனர். சிறிய வயதாக இருந்தாலும் அவர்களின் பாடும் திறமையோ மிகையாக உள்ளது.
இந்த பக்தி பாடல் சுற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பக்தி பாடல்களை பாடி அசத்தி வரும் நிலையில் தற்போது இரண்டு சிறுவர்கள் ஐய்யப்பன் பாடலை மிக அழகாக பாடி உள்ளனர். இதற்காக இவர்கள் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றுள்ளார்கள்.
இதில் நடுவர்கள் முதல் அரங்கத்தில் இருந்த அனைவரும் தன்னிலை மறந்து இந்த பாடலை சேர்ந்து பாடியிருந்தார்கள். சபரி மலை தரிசனத்தின் குறையை தீர்த்து வைக்கும் அளவிற்கு போட்டியாளர்கள் மெய்சிலிர்க்க பாடி இருந்தனர். இது தொலைக்காட்சியில் இன்று ஒலிபரப்பபடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |