பிக் பாஸில் இந்த வாரம் Elimination Voting-இல் குறைவான, அதிகமான வாக்குகள் யாருக்கு?
பிக் பாஸ் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போட்டியாளர்களின் வாக்குகளின் முழு விபரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் வாக்கு தொகை
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 12 போட்டியாளர்கள் எலிமினேஷன் தேர்வை எதிர்கொண்டுள்ளனர். அந்த வகையில் முத்துக்குமரன், சௌந்தர்யா, ரானவ், ஜாக்குலின், சத்யா, ராயன், பவித்ரா ஜனனி, மஞ்சரி, ரஞ்சித், தர்ஷிகா, சச்சனா, போன்றோர் நோமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் போட்டியாளர் சிவகுமார் குறைவான வாக்குகளை பெற்று இந்த போட்டியை விட்டு வெளியேறி சென்றார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் யார் யார் எவ்ளவு வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் எனும் தகவல் வெளியாகி உள்ளது.
முத்துக்குமரன் 30.06% வாக்குகளைப் பெற்று 67,537 வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். 16.44% (36,932 வாக்குகள்) பெற்ற சௌந்தர்யா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
வைல்டு கார்டு போட்டியாளர் ரானவ் 10.43% (23,431 வாக்குகள்), ஜாக்குலின் 9.85% (22,128 வாக்குகள்) பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நடுத்தரத்தில் வாக்குகள் பெற்ற போட்டியாளர்கள் படி சத்யா (5.24%), ராயன் (4.88%), மற்றும் பவித்ரா ஜனனி (4.75%) போன்றோர் பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றார்கள்.
வாக்குப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள போட்டியாளராக ஆனந்தி உள்ளார். இவர் 2.58% (5,829 வாக்குகள்) மட்டுமே பெற்றுள்ளார்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |